/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலில் ஆதரவு யாருக்கு? கார் வியாபாரிகள் தீர்மானம்
/
தேர்தலில் ஆதரவு யாருக்கு? கார் வியாபாரிகள் தீர்மானம்
தேர்தலில் ஆதரவு யாருக்கு? கார் வியாபாரிகள் தீர்மானம்
தேர்தலில் ஆதரவு யாருக்கு? கார் வியாபாரிகள் தீர்மானம்
ADDED : டிச 15, 2025 05:13 AM

அவிநாசி: அவிநாசி, ஆட்டையாம்பாளையத்தில், தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் வடக்கு மாவட்ட வாகன வியாபாரிகள் சங்க ஐந்தாம் ஆண்டு விழா நடந்தது.
மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், ''எங்கள் சங்கம் மூலம் முறைப்படுத்தி, அடையாள அட்டை வைத்துள்ள வியாபாரிகளுக்கு அவரவர் விற்பனை செய்யும் வாகனங்களின் பதிவு சான்றுகளின் ஆவணத்தை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாக பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். கோரிக்கையை ஏற்றால், இந்த முறை தேர்தலில் முழு ஆதரவும் கொடுக்க தயாராக உள்ளோம்'' என்றார்.
மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணியம், செயலாளர் லோகநாதன், பொருளாளர் முருகேசன், திருப்பூர் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.