/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடீரென மாயமான மலைக்கோயில் அடையாளம் இன்றி அகற்றியது யார்
/
திடீரென மாயமான மலைக்கோயில் அடையாளம் இன்றி அகற்றியது யார்
திடீரென மாயமான மலைக்கோயில் அடையாளம் இன்றி அகற்றியது யார்
திடீரென மாயமான மலைக்கோயில் அடையாளம் இன்றி அகற்றியது யார்
ADDED : செப் 21, 2025 01:14 AM

பல்லடம்:மங்கலம் அருகே சிறிய மலைக்குன்றின் மீது இருந்த கோயில் திடீரென மாயமானதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் அரசுப்பள்ளி அருகே சிறிய மலை குன்றின் மேல், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதேசிலிங்கம் கோயில் இருந்தது.
பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலைமீது ஏறி சிவபெருமானை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
திடீரென, மலை மீது இருந்த கோயில் மாயமானது. தகவலறிந்த பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு நிர்வாகி அண்ணாதுரை தலைமையிலான சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் மங்கலம் மலைக்கோயில் சென்று பார்வையிட்டனர்.
அண்ணாதுரை கூறியதாவது:
மங்கலம் மலைக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. மலை மீது சிவபெருமான் அருள்பாலிப்பது எங்கும் இல்லாத சிறப்பு. இப்படிப்பட்ட கோயிலை முறையாக பராமரிக்காமல், அறநிலைய துறை பாழ்படுத்தி வருகிறது. கோயில் முன் மண்டபம் கரையான் அரித்து சேதமடைந்துள்ளது.
ஆன்மிகத்தை வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை இவ்வாறு அவல நிலையில் கோவிலை வைத்துள்ளது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள இக்கோயிலில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென மாயமாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கோயில் பூஜாரியை கேட்டால், புனரமைப்பதற்காக, இடித்து அகற்றப்பட்டதாக கூறுகிறார்.
இல்லாவிடில், கோயிலில் பாலாலயம் செய்திருக்க வேண்டும். அதற்கான அடையாளமே கோவிலில் இல்லை. கோயிலை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அறநிலையத்துறை செயல்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கோயிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.