/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொருள் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு; ரேஷன் கடையை 2 ஆக பிரிக்க எதிர்பார்ப்பு
/
பொருள் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு; ரேஷன் கடையை 2 ஆக பிரிக்க எதிர்பார்ப்பு
பொருள் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு; ரேஷன் கடையை 2 ஆக பிரிக்க எதிர்பார்ப்பு
பொருள் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு; ரேஷன் கடையை 2 ஆக பிரிக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 09, 2025 11:22 PM

பல்லடம்; பொருட்கள் வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதால், ரேஷன் கடையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என, அருள்புரம் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, 1,200க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் பொருட்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அதிக கார்டுதாரர்கள் இருப்பதால், ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்க வரும் போதும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கடையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்டுகள் இருப்பதால், உப்பிலிபாளையம் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க எப்போதும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கடை திட்டத்தின் கீழ், இப்பகுதியில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள் பலரும் இங்கு வருகின்றனர். இதனால், மணிக்கணக்கில் காத்திருந்து ரேஷன் பொருட்கள் பெற்று செல்ல வேண்டியுள்ளது.
எனவே, கடையை இரண்டாகப் பிரித்து, கூடுதல் ரேஷன் கடை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என, ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இன்று வரை கோரிக்கையை நிறைவேற்றாததால், ஒவ்வொரு முறையும் ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்து அவதிக்குள்ளாகிறோம்.
இதனால், வேலைக்குச் செல்ல முடியாமல் பாதி நாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, உப்பிலிபாளையம் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து, இப்பகுதியில் கூடுதல் ரேஷன் கடை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.