/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஜனநாயக ரீதியான போராட்டம் ஒடுக்குவது நல்ல செயல் அல்ல'
/
'ஜனநாயக ரீதியான போராட்டம் ஒடுக்குவது நல்ல செயல் அல்ல'
'ஜனநாயக ரீதியான போராட்டம் ஒடுக்குவது நல்ல செயல் அல்ல'
'ஜனநாயக ரீதியான போராட்டம் ஒடுக்குவது நல்ல செயல் அல்ல'
ADDED : டிச 28, 2025 07:06 AM

பல்லடம்: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
கிராமம் கிராமமாக தேடிச் சென்று குப்பை கொட்டுவதில், திருப்பூர் மாநகராட்சிக்கு நிகர் எந்த மாநகராட்சியும் கிடையாது.
காளம்பாளையத்தில் துவங்கி, நெருப்பெரிச்சல், முதலிபாளையம், 63 வேலம்பாளையம், இச்சிப்பட்டி, சின்னக்காளிபாளையம், முத்தணம்பாளையம், பொல்லிக்காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களை தொடர்ந்து, தற்போது, ஊத்துக்குளியில் முகாமிட்டுள்ளனர். கிராமங்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் குடிநீர் ஆதாரத்தை அழித்துவிட்டு, அங்கெல்லாம் குப்பைகளைக் கொட்டி, மாநகராட்சி நிர்வாகம் எதை சாதிக்க விரும்புகிறது?
நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும், குப்பைகளை மறுசுழற்சி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிராமங்களை நோக்கி குப்பைகளைக் கொண்டு செல்வது எந்த விதத்தில் நியாயம்? பிற மாநிலங்கள், மாவட்டங்கள் இப்படித்தான் குப்பை மேலாண்மையை செயல்படுத்தி வருகிறதா? அந்நிய முதலீடுகளை அதிகம் ஈர்த்து வரும் திருப்பூர் மாநகராட்சி, குப்பை விஷயத்திலும், தமிழக அளவில் ஈர்த்துள்ளது.
கிராமங்களை அழிக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் குப்பைக்கு எதிராக போராடியவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோல், ஜனநாயக ரீதியான போராட்டத்தை ஒடுக்கும் இச்செயல், எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

