/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுடலை மகாராஜா கோவில் 19ம் ஆண்டு பொங்கல் விழா
/
சுடலை மகாராஜா கோவில் 19ம் ஆண்டு பொங்கல் விழா
ADDED : செப் 10, 2025 11:48 PM

அனுப்பர்பாளையம்:
திருப்பூர், செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ சுடலைமகாராஜா, ஸ்ரீ முண்டன் சுவாமி, ஸ்ரீ ராஜ காளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பிரம்மசக்தி கோவில் உள்ளது.
இக்கோவில் 19ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த, 6ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பக்தர்கள், அவிநாசி பெரிய கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
இரவு 8:00 மணிக்கு படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல். இரவு 9:00 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, இரவு 11:00 மணிக்கு மாசான சுடலை ஈஸ்வரர் மயான வேட்டைக்கு செல்லுதல், சுடலை மகாராஜா கொதிக்கும் நீரில் குளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். சுடலை மகாராஜா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மதியம் 11:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.