/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எட்டாக்கனியாகும் அத்திக்கடவு குடிநீர்: பொங்கலுார் வட்டார மக்கள் வேதனை
/
எட்டாக்கனியாகும் அத்திக்கடவு குடிநீர்: பொங்கலுார் வட்டார மக்கள் வேதனை
எட்டாக்கனியாகும் அத்திக்கடவு குடிநீர்: பொங்கலுார் வட்டார மக்கள் வேதனை
எட்டாக்கனியாகும் அத்திக்கடவு குடிநீர்: பொங்கலுார் வட்டார மக்கள் வேதனை
ADDED : செப் 10, 2025 11:49 PM
பொங்கலுார்:
பொங்கலுார் பகுதி மழை மறைவு பிரதேசத்தில் உள்ளதால் அடிக்கடி வறட்சி தாக்குகிறது.
பி.ஏ.பி., திட்டம் பொங்கலுார் பகுதிக்குள் தான் செல்கிறது. ஒரு சில கிராமங்கள் பாசனப்பகுதியில் இருந்து விலகி உள்ளன. மீதம் இருக்கும் கிராமங்களுக்கும்இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பாசனம் நடக்கும் பகுதிகளில் குடிநீர் பிரச்னை இருக்காது. பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் ஆண்டு தோறும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கிறது. பொங்கலுார் ஒன்றியத்தின் கடைக்கோடி வரை அத்திக்கடவு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு குடிநீர் வழங்கப்பட்ட போதிலும் அது பொங்கலுார் வரையே வினியோகிக்கப்படுகிறது. கிழக்குப் பகுதிக்கு குடிநீர் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர் ஆதாரங்கள் வற்றி வரும் நிலையில் மக்கள்குடிநீருக்காக தவித்து வருகின்றனர். அத்திக்கடவு திட்டம், 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்க முடிவதில்லை என்று ஒரே பதிலை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இன்று மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது உண்மைதான். அதற்காக ஒரே பதிலை திரும்பத்திரும்ப கூறுவதால் குடிநீர் பிரச்னை தீர்ந்து விடுமா. கோடை காலத்திலாவது அத்திக்கடவு குடிநீரை முறையாக வினியோகம் செய்ய வேண்டும். எங்கள் குடிநீர் தாகத்தை தீர்க்க வேண்டும் என பொங்கலுார் வட்டார பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.