/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமப்புறங்களில் அதிகரிக்கும் தெரு நாய்க்கடி; அம்பலப்படுத்திய புள்ளிவிபரம்

ADDED : செப் 12, 2025 11:00 PM

திருப்பூர்: 'கிராமப்புறங்களில், தெருநாய்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது' என்பது, பொது சுகாதாரத்துறையினர் வழங்கியுள்ள புள்ளி விபரத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நகர, கிராமப்புறங்களில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருவது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதில், திருப்பூர், பல்லடம் வட்டம், பொங்கலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொங்கலுார், எ.வடுகபாளையம், கொடுவாய் ஆகிய, 3 சுகாதார நிலையங்கள் வாயிலாக, கடந்த, 2022 ஜன., முதல், 2025 ஜூன் வரை, தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரம், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ், பொங்கலுார் தேவனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரால் பெறப்பட்டுள்ளது.
இந்த மூன்று சுகாதார நிலையங்கள் வாயிலாக மட்டும், கடந்த, 2022ல், 1,181 பேர்; 2,2023ல், 1,545 பேர்; 2024ல், 1,736 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2025ல், ஜன., துவங்கி, டிச., ஜூலை வரையிலான, 7 மாத காலத்தில், 1,003 பேர் என, கடந்த, நான்காண்டில், 5,465 பேருக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என, பொதுசுகாதாரத்துறை புள்ளிவிபரம் வழங்கியுள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போன்று, வெறும், 3 சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இந்தளவு தெருநாய்கடி பாதிப்பு உள்ள நிலையில், மாவட்ட வாரியாக, ஆயிரக்கணக்கான மக்கள் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்பது, இதன் வாயிலாக நிரூபணமாகியிருக்கிறது.
எனவே, தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பணியை, மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர், செப். 13-
'கிராமப்புறங்களில், தெருநாய்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது' என்பது, பொது சுகாதாரத்துறையினர் வழங்கியுள்ள புள்ளி விபரத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நகர, கிராமப்புறங்களில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருவது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதில், திருப்பூர், பல்லடம் வட்டம், பொங்கலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொங்கலுார், எ.வடுகபாளையம், கொடுவாய் ஆகிய, 3 சுகாதார நிலையங்கள் வாயிலாக, கடந்த, 2022 ஜன., முதல், 2025 ஜூன் வரை, தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரம், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ், பொங்கலுார் தேவனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரால் பெறப்பட்டுள்ளது.
இந்த மூன்று சுகாதார நிலையங்கள் வாயிலாக மட்டும், கடந்த, 2022ல், 1,181 பேர்; 2023ல், 1,545 பேர்; 2024ல், 1,736 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2025ல், ஜன., துவங்கி, ஜூலை வரையிலான, 7 மாத காலத்தில், 1,003 பேர் என, கடந்த, நான்காண்டில், 5,465 பேருக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என, பொதுசுகாதாரத்துறை புள்ளிவிபரம் வழங்கியுள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போன்று, வெறும், 3 சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இந்தளவு தெருநாய்க்கடி பாதிப்பு உள்ள நிலையில், மாவட்ட வாரியாக, ஆயிரக்கணக்கான மக்கள் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்பது, இதன் வாயிலாக நிரூபணமாகியிருக்கிறது.
எனவே, தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பணியை, மாவட்ட நிர்வாகம் வேகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.