ADDED : செப் 12, 2025 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; வஞ்சிபாளையத்தில் இருந்து தெக்கலுார் செல்லும் சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.
கோதபாளையம் பகுதியில் பல நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது. பராமரிப்புப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், விபத்தை எதிர்கொள்ளும் நிலையும் காணப்படுகிறது. எனவே, குழியை மூடி, விபத்து அபாயத்தை தவிர்க்க, சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.