ADDED : செப் 09, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்தியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். சாலை விபத்துகளை தடுப்பது, விபத்து தடுப்பு குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.