/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடந்த மாத மின் கட்டணம்; மின் வாரியம் அறிவுறுத்தல்
/
கடந்த மாத மின் கட்டணம்; மின் வாரியம் அறிவுறுத்தல்
ADDED : செப் 09, 2025 11:19 PM
திருப்பூர்; திருப்பூரில் சில பகுதிகளில் மின் கணக்கீடு செய்யப்படாததால், கடந்த மாத கட்டணத்தையே இம்மாதம் செலுத்தும்படியும் மின்பகிர்மான கழகம் கூறியுள்ளது.
திருப்பூர் மின்பகிர்மான வட்டம், திருப்பூர் கோட்டம், பிரிட்ஜ்வேகாலனி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட எஸ்.வி.காலனி, கோல்டன் நகர், முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் நிர்வாக காரணங்களால் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. இதனால், மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புகளுக்கு 7ம் மாத மின் கட்டணத்தை 9ம் மாதத்தில் செலுத்த வேண்டும்.
அவ்வகையில், எஸ்.வி.காலனி - எஸ்.வி.காலனி மெயின் ரோடு, எஸ்.வி. காலனி கிழக்கு 1 முதல் 8வது வீதி வரை, ஜோதி நகர் 1,2 வது வீதி, செவன்ஸ்டார் வீதி.கோல்டன் நகர் - சூர்யா காலனி, சஞ்சீவ் நகர் 1 முதல் 4வது வீதி, கர்ணாபுரி 1 முதல் 7வது வீதி, நாராயணபுரம் 1, 2வது வீதி, பெருமாள் நகர், கோல்டன் நகர் 1 முதல் 4வது வீதி ஜெயலட்சுமி நகர் 1 முதல் 3வது வீதி, தங்கமாரியம்மன் கோவில் வீதி. முனியப்பன் கோவில் - புவனேஷ் பள்ளி, விஜய் மெஸ், ராமய்யாகாலனி வீதி, தனேஷ் மேஸீன் வீதி, முனியப்பன் கோவில் பின்புறம், பத்ரகாளி கோவில் வீதி பின்புறம் ஆகிய பகுதிகளில், கடந்த மாத மின் கட்டணத்தை செலுத்த வேண்டுமென மின்வாரியம் அறிவித்துள்ளது.