ADDED : செப் 11, 2025 06:44 AM
திருப்பூர்; திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க., செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாமிநாதன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்று, 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், 15,516 கோடி ரூபாய் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்தும், 17,613 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கியும், தமிழகத்தினை முதன் மாநிலமாக உருவாக்கி வரும் முதல்வரை பாராட்டி நன்றி தெரிவிப்பது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள இந்திய பொருட்களுக்கான, 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழில்துறையினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கிட வேண்டுமென பிரதமரை வலியுறுத்துவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.