sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பை பிரச்னை: விவசாயிகள் சரமாரி கேள்வி; ரூ.100 கோடி முறைகேடு என கலெக்டரிடம் பகிரங்க குற்றச்சாட்டு

/

குப்பை பிரச்னை: விவசாயிகள் சரமாரி கேள்வி; ரூ.100 கோடி முறைகேடு என கலெக்டரிடம் பகிரங்க குற்றச்சாட்டு

குப்பை பிரச்னை: விவசாயிகள் சரமாரி கேள்வி; ரூ.100 கோடி முறைகேடு என கலெக்டரிடம் பகிரங்க குற்றச்சாட்டு

குப்பை பிரச்னை: விவசாயிகள் சரமாரி கேள்வி; ரூ.100 கோடி முறைகேடு என கலெக்டரிடம் பகிரங்க குற்றச்சாட்டு


ADDED : செப் 11, 2025 06:44 AM

Google News

ADDED : செப் 11, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாது என்கிற குரல் ஓங்கி ஒலித்தது.

திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமி, நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, போலீஸ் துணை கமிஷனர் தீபாசத்தியன் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை, முதலிபாளையம் பாறைக்குழியில் கொட்டிவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களும், விவசாய அமைப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

குறைகேட்பு கூட்டம் துவங்கிய உடனேயே, பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் உள்பட விவசாயிகள் அனைவரும் எழுந்து சென்று, கலெக்டர் உள்பட மேடையில் அமர்ந்திருந்த அதிகாரிகளை சூழ்ந்து கொண்டனர்.

இது குறித்த விவாதம் பின் வருமாறு:

விவசாயிகள்: முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுப்பகுதி விவசாய நிலங்கள் பாழ்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களுக்கு, உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களிடம் காண்பிப்பதற்காக பாட்டிலில் கொண்டுவந்துள்ளோம்; அரங்கிற்குள் கொண்டுவர அனுமதி தாருங்கள்.

கலெக்டர்: அதெல்லாம் தேவையில்லை.

விவசாயிகள்: நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது. அதற்கான போட்டோ உள்ளது. எனவே, முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாது.

மாநகராட்சி துணை கமிஷனர் மகேஸ்வரி: 30 நாட்களாக குப்பை கொட்ட முடியாத சூழலில்தான், பாறைக்குழியில் கொட்டி வருகிறோம்.

விவசாயிகள்: ஏன் போலீஸ் பாதுகாப்போடு குப்பை கொட்டுகிறீர்கள். 2015 முதலே, முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு, சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்துள்ளது. எங்களோடு வாருங்கள்; பாறைக்குழி அருகே, 100 மீ., துாரத் தில் நின்றுபாருங்கள்.

துணை கமிஷனர்: ஆய்வாளர்களை வரவழைத்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படும். குப்பை கையாளுவது தொடர்பாக மாநகராட்சி சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளது. அந்த வழிமுறைகள் பின்பற்றப்படாதபட்சத்தில், நீங்கள் கேள்வி கேட்கலாம். எங்களுக்கு சிறிது காலம் அவகாசம் கொடுங்கள்.

விவசாயிகள்: மேயர், வெள்ளை அறிக்கை வெளியிடுகிறேன்; திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக கையாளுவது தொடர்பாக அறிக்கை வெளியிடுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார். குப்பை கையாளுவதற்கு, அறிவியல் பூர்வமான எத்தகைய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குப்பை பிரச்னையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கலாமே; குறிப்பிட்ட ஏழுபேரை மட்டும் ஏன் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு அழைத்துள்ளீர்கள்?

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம், 100 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் முன்னிலையிலேயே விவசாயிகள், மாநகராட்சி நிர்வாகத்தை பகிரங்கமாக குற்றச்சாட்டி பேசினர்.

ஒரு கட்டத்தில், விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். இந்நிலையில், சதீஷ்குமார் என்பவரின் கையிலிருந்த மைக்கை, கலெக்டர் தானே நேரடியாக வாங்கி, பின்னால் நின்றிருந்த அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.

வழக்கமாக மதியம், 1:30 மணிக்கு குறைகேட்பு கூட்டம் முடிவடைந்துவிடும். குப்பை பிரச்னை வெடித்ததால், காலை, 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம், 2:30 மணி வரை நடைபெற்றது.

கூட்டம் நிறைவடையும் தருவாயிலும், கலெக்டரை சூழ்ந்த விவசாய அமைப்பினர், முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டப்படாது என உறுதி கொடுங்கள்' என்றனர். விவசாயிகளின் விடாப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்காமலேயே, கலெக்டர், அரங்கிலிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை பட்டு சாகுபடி விவசாயி கண்ணீர்


மடத்துக்குளத்தை சேர்ந்த வயதுமுதிர்ந்த பட்டு விவசாயி மாரியப்பன். அருகிலுள்ள குவாரியால், பட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, முந்தைய குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்திருந்தார். நேற்றைய கூட்டத்தில், அம்மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதொடர்பாக தோட்டக்கலைத்துறையினர், 'குவாரியால் பட்டு உற்பத்தி பாதித்ததாகவும், இழப்பீடு வழங்க கோரியும், மாரியப்பன் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக, எங்கள் துறை சார்ந்து பதில் தர இயலாது,' என்றனர்.

இதனை கேட்ட மாரியப்பன், கண்ணீர் மல்க, கலெக்டர் முன் பேசியதாவது:

பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது தொடர்பாக எந்த அதிகாரியும் ஆய்வு நடத்தவில்லை. குவாரி உரிமையாளர்களிடம் பேசிவிட்டு சென்று விடுகின்றனர். ஒரு அதிகாரி, வேறு ஏதாவது வெள்ளாமை செய்ய வேண்டியதுதானே என்றார். ஒவ்வொருமுறையும் மிகுந்த மன வேதனையுடனேயே குறைகேட்பு கூட்டத்துக்கு வந்துசெல்கிறேன். என் கஷ்டத்தை நீங்களெல்லாம் பார்க்கவேண்டும் என்பதாலேயே வருகிறேன். கொஞ்சநஞ்ச கஷ்டமில்லை சாமி; பட்டு உற்பத்தி பாதிப்பால், நான் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் என்றார், நா தழுதழுக்க.

கலெக்டர் மனீஷ் நாரணவரே, 'பட்டு உற்பத்தி பாதிப்புக்கான காரணம் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us