/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டியலில் புதிய வரிசைப்படி அடையாள அட்டை எண் வேண்டும்; அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
/
பட்டியலில் புதிய வரிசைப்படி அடையாள அட்டை எண் வேண்டும்; அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
பட்டியலில் புதிய வரிசைப்படி அடையாள அட்டை எண் வேண்டும்; அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
பட்டியலில் புதிய வரிசைப்படி அடையாள அட்டை எண் வேண்டும்; அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
ADDED : செப் 12, 2025 12:27 AM

திருப்பூர்l பழைய அடையாள அட்டை எண்ணுக்கு பதிலாக, புதிய வரிசைப்படி அடையாள அட்டை வழங்க வேண்டுமென, அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில், 1,200க்கும் அதிகமான வாக்காளர் உள்ளிட்ட ஓட்டுச்சாவடிகளை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எட்டு சட்டசபை தொகுதிகளில், 1,200க்கும் அதிகமான வாக்காளர் உள்ள சாவடிகள், குறைந்த ஓட்டு உள்ள சாவடி, கட்டட வசதி இல்லாமல் மற்ற பள்ளிக்கு மாற்றும் சாவடிகள், பள்ளி தரம் உயர்த்தியதால் பெயர் மாற்றம் செய்யப்படும் சாவடி என, மாவட்ட அளவில், 363 ஓட்டுச்சாவடிகள் மாற்றப்பட உள்ளன.
இதுதொடர்பாக, சட்டசபை வாரியாக கருத்துக்கேட்பு முடிந்து, நேற்று மாவட்ட அளவிலான அனைத்துக்கட்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்று, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஓட்டுச்சாவடி திருத்தம் தொடர்பாக, 10 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்; அதன் அடிப்படையில் பரிசீலித்து முடிவு செய்யப்படும் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். துவக்கத்தில், வாக்காளர் அடையாள அட்டையில், டி.என். என்ற மாநிலத்தின் ஆங்கில சுருக்கம் இடம்பெற்றிருந்தது.
தற்போது, ஆங்கிலத்தில் உள்ள மூன்று எழுத்துக்களுடன் எண் வரிசை வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக சரிபார்க்க, தற்போதுள்ள வரிசை எண் மட்டுமே ஏற்கப்படுகிறது; பழைய எண்ணை பயன்படுத்தி, ஆன்லைனில் சரிபார்க்க இயலவில்லை.
எனவே, பழைய எண்களுக்கும், புதிய வரிசைப்படி, அடையாள அட்டை எண் வழங்கப்பட வேண்டும் என, அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.