/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
/
பிளஸ் 1 மாணவி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : டிச 27, 2025 06:20 AM
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன், 28. கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு, பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறிய மணிகண்டன், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன், மாணவிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பெற்றோர், மாணவியை, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

