/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் ஆர்வம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் ஆர்வம்
ADDED : செப் 12, 2025 12:35 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், நெருப்பெரிச்சல் கொங்கு மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம், எரிசக்தி துறை, ஆதிதிராவிடர், கூட்டுறவு, வீட்டு வசதி துறை, மாற்று திறனாளி நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், 4,5,6,7 உள்ளிட்ட வார்டு பொது மக்கள் கலந்து கொண்டு தங் கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மகளிர் உரிமை தொகை பெற மனு கொடுக்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முன்னதாக முகாமை மாநகராட்சி இரண்டாவது மண்டல தலைவர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். மாநகராட்சி உதவி கமிஷனர் சக்திவேல், உதவி பொறியாளர் ஹரி உட்பட பலர் பங்கேற்றனர்.