sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புத்தாண்டில் பின்னலாடை வர்த்தகத்தில்... வெற்றி! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

/

புத்தாண்டில் பின்னலாடை வர்த்தகத்தில்... வெற்றி! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

புத்தாண்டில் பின்னலாடை வர்த்தகத்தில்... வெற்றி! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

புத்தாண்டில் பின்னலாடை வர்த்தகத்தில்... வெற்றி! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை


ADDED : டிச 28, 2025 06:54 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இந்தாண்டு துவக்கத்தில்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த நிதியாண்டில்தான் (2024-25) முதன்முதலாக, 45 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டது. முந்தைய ஆண்டுகளில், 40 ஆயிரம் கோடியை தாண்டாத வர்த்தகம், 2025-26ம் நிதியாண்டில் எதிர்பாராத உச்சத்தை அடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நிலையான பஞ்சு - நுால் விலை, 'சீனா ஒன் பிளஸ்' கோட்பாட்டால் கைகூடிய புதிய ஆர்டர்கள் நம்பிக்கையூட்டின.

'நிட்ேஷா'; 'நிட்ஜோன்' கண்காட்சிகள் மட்டுமல்லாது, 'நிட்பேர்'; 'யார்னெக்ஸ்' கண்காட்சியும், புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் வகையில் அமைந்திருந்தன. ஏப்ரலில் துவங்கி, ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச வளர்ச்சியில் இருந்தது பின்னலாடை தொழில். ஏற்றுமதி வர்த்தகமும், உள்நாட்டு விற்பனைக்கான உற்பத்தியும், போட்டி போட்டு வளர்ந்து கொண்டிருந்தன.

அதன் பிறகுதான், அமெரிக்காவின் அறிவிப்பு பேரிடியாக இறங்கியது. இந்திய பொருட்களுக்கான வரிவிதிப்பு, முதல்கட்டமாக 25 சதவீதம் சரிதான் என்பதுபோல், ஏற்றுமதியாளர் நம்பினர்; இரண்டாம் கட்டமாக, 25 சதவீதம் உயர்த்தியதை நம்ப முடியாமல் திகைத்தனர். வேகமாக வளர்ந்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் திடீரென தடுமாறின.

அரசு தரப்பு அறிவிப்புகள் நடைமுறைக்கு வராமல் இருப்பதால், அமெரிக்க வர்த்தகத்தை அனைவராலும் தொடர முடியவில்லை. இதற்கிடையே பிரிட்டன், ஓமன் மற்றும் நியூசிலாந்துடன், புதிய வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடனான பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் நிலவுகிறது.

அமெரிக்க சந்தைக்கு மாற்றான சந்தை உருவாக்கம் என்பது, ஐந்தாண்டு முயற்சியால் தான் வெற்றி பெறும். தற்போது, புதிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உருவானது, எதிர்கால வளர்ச்சிக்கு பயனளிக்கும். தற்போதைய மந்தநிலை மாறிட, அமெரிக்காவுடனான வர்த்தகம் விரைவில் கையெழுத்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இந்த நம்பிக்கையுடன் 2026ம் ஆண்டை எதிர்கொள்ளத் தயாராகின்றனர்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா? நடப்பு, 2025ம் ஆண்டு, எதிர்பாராத வளர்ச்சியை துவக்கத்தில் வழங்கியது; ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அதிர்ச்சியான இடையூறுகளும் ஏற்பட்டன. திருப்பூரில் நடத்திய, ஜவுளி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிகள், பசுமை சார் ஆடை உற்பத்திக்கு வழிகாட்டியது. சரியான நேரத்தில், சரியான வாய்ப்பு உருவாகிக்கொண்டிருந்த போது, திடீரென அமெரிக்க வரி உயர்வு சோதனையாக மாற்றிவிட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தான் அதிகம் கை கொடுத்தது. கொரோனாவுக்கு பிறகு, சீன ஆர்டர்கள் நமக்கு திரும்பியதால், அமெரிக்காவுடன் ஏற்றுமதி அதிகரித்தது. மற்ற நாடுகளை காட்டிலும், அமெரிக்க ஆர்டர்கள் அதிகபட்ச ஆடைகளை கொள்முதல் செய்யும் பெரிய ஆர்டர்கள். மற்ற நாடுகளுடன் மூன்று ஆர்டர் பெறுவதும், அமெரிக்காவில் ஒரு ஆர்டர் பெறுவதும் சமம். மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்தாலும் அதிக பயனிருக்காது. 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தில், அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தை தொடர்ந்தால் மட்டுமே, பழைய வர்த்தக உறவை தக்கவைக்க முடியும். புதிய வர்த்தக ஒப்பந்தங்கள், எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அமெரிக்காவுடன் விரைவில், வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது போல், 2026ம் ஆண்டு பிறப்பு, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளரை சூழ்ந்திருக்கும் சவால்களை முறியடிப்பதாகவும், அமெரிக்க வரி உயர்வை வெற்றிகொள்வதாகவும் அமையும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். - திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.








      Dinamalar
      Follow us