/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதே சிறந்தது'
/
'மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதே சிறந்தது'
'மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதே சிறந்தது'
'மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதே சிறந்தது'
ADDED : டிச 28, 2025 07:08 AM

திருப்பூர், : வாரந்தோறும், தொழில் அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் 'காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடன், கலெக்டர் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
அவ்வகையில், 9வது நிகழ்ச்சியாக நேற்று தன்னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்தில் பயின்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தயாராகும் 26 பேர் பங்கேற்றனர்.
இதில், பங்கேற்றவர்கள் மத்தியில் கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:
மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும் நன்கு புரிந்து படித்தால் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி பாடத்திட்டங்களில் இருந்து அதிகளவிலான கேள்விகள் போட்டித் தேர்வில் கேட்கப்படுகிறது. போட்டித் தேர்வு எதிர்கொள்ளும் போது கடந்த, 10 ஆண்டுகளுக்கான கேள்வித்தாள் மற்றும் பாடத்திட்டத்தினை நன்கு படிக்க வேண்டும். கவன சிதறல்கள் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவதும் அவசியம். உங்களுடைய நோக்கம் என்னவோ அதை நோக்கி கடின உழைப்பை செலுத்த வேண்டும். விடாமுயற்சியும் கடின உழைப்பும் மிகப்பெரிய வெற்றியைத் தரும். அனைவருக்கும் லட்சியம் உண்டு. அதை அடைய விடாமுயற்சி வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது. அதனை கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
---
'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில் குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலெக்டர் மனிஷ் நாரணவரே கலந்துரையாடினார்.

