/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவி கொலை; பதுங்கிய கணவர் கைது
/
மனைவி கொலை; பதுங்கிய கணவர் கைது
ADDED : செப் 23, 2025 06:06 AM
திருப்பூர்; மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கவுரங்க மண்டல், 37. மனைவி ரிங்குமண்டல், 31. தம்பதியினர், காங்கயம் - முத்துார் ரோடு, படியாண்டிபாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். கடந்த, 18ம் தேதி தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதில், மனைவியை கட்டையால் அடித்து கயிறு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்து தப்பினார். தலைமறைவான கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரயில் மூலம் சென்னைக்கு தப்பி சென்றது தெரிந்தது.
இதனால், தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு தேடிய போது, மேற்கு வங்கத்துக்கு தப்பி சென்றது குறித்து தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், கொல்கத்தா ரயில்வே ஸ்டேஷன் அருகே பதுங்கியிருந்த கவுரங்கமண்டலை கைது செய்தனர்.