/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் கோப்பை கிரிக்கெட்; பிளாட்டோஸ் பள்ளி அசத்தல்
/
முதல்வர் கோப்பை கிரிக்கெட்; பிளாட்டோஸ் பள்ளி அசத்தல்
முதல்வர் கோப்பை கிரிக்கெட்; பிளாட்டோஸ் பள்ளி அசத்தல்
முதல்வர் கோப்பை கிரிக்கெட்; பிளாட்டோஸ் பள்ளி அசத்தல்
ADDED : செப் 23, 2025 06:06 AM

திருப்பூர்; திருப்பூரில் நடந்த முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பிளாட்டோஸ் பள்ளி மாவட்ட அளவில் வென்று அசத்தியது.
முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி திருப்பூர் அருகே டீ பப்ளிக் பள்ளியில் நடந்தது. பங்கேற்ற பிளாட்டோஸ் பள்ளி அணி வென்று கோப்பையை தட்டி சென்றது. பிளாட்டோஸ் அகாடமி பள்ளி அணியினருக்கும், பல்லடம் ஆண்கள் பள்ளி அணிக்கும் இடையே இறுதி போட்டி நடந்தது. பிளாட்டோஸ் பள்ளி, 3 ஓவர்களில், 43 ரன்கள் எடுத்து வென்றது. பிரனவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். ரோஹித், ஏழு பந்துகளில், 20 ரன்கள் எடுத்தார். கோப்பை வென்ற அணியினர் அனைவரையும் டி.எஸ்.சி.,யின் நிறுவனரும், பயிற்சியாளருமான ரமேஷ், பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.