/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகிழகம் முதியோர் இல்லம் அடிக்கல் நாட்டு விழா
/
மகிழகம் முதியோர் இல்லம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : செப் 12, 2025 12:28 AM

அவிநாசி; திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில், அவிநாசி அருகே மகிழகம் என்ற முதியோர் இல்லம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை விழா நடை பெற்றது.
அவிநாசி ஒன்றியம், வேட்டுவபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு பெரிய காட்டுத் தோட்டத்தில் அய்யம்மாள் மற்றும் சின்னச்சாமி வளாகத்தில் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் மகிழகம் என்ற முதியோர் இல்லம் பூமி பூஜை நடைபெற்றது. இதற்காக, 2.50 ஏக்கர் பரப்பளவு பூமியை, திருமுருகன் டெக்ஸ்டைல்ஸ் கனகராஜ் மற்றும் துரைசாமி ஆகியோரிடம் இருந்து தானமாக பெற்று 22 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டடம் கட்டப்படுகிறது. கட்டட பணிக்கான பூமி பூஜையை ரோட்டரி மாவட்ட கவர்னர் தன சேகர் துவக்கி வைத்தார்.
ராமராஜ் காட்டன் குழும நிறுவனர் நாகராஜன் அடிக்கல் நாட்டினார். ரோட்டரி திட்ட முதன்மை ஆலோசகர் நந்தகோபால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கவுரவ விருந்தினர் களாக ரோட்டரி நிர்வாகிகள் சகாதேவன், கார்த்திகேயன், வல்லபதாஸ், சிவசங்கரன், மாவட்ட கவர்னர் ஆளுநர் தேர்வு பூபதி, டாக்டர். முருகநாதன், சண்முகசுந்தரம், ரவி, ஜார்ஜ் சுந்தர்ராஜ், சுரேஷ்பாபு, வனம் அமைப்பு சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, மகிழகம் இல்லம் கட்ட நிலம் தானமாக வழங்கிய கனகராஜ், துரைசாமி குடும்பத்தினருக்கு ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சால்வை அணிவித்து, பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.