/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரதியார் நினைவு தின கவிதை கருத்தரங்கு
/
பாரதியார் நினைவு தின கவிதை கருத்தரங்கு
ADDED : செப் 11, 2025 06:36 AM

திருப்பூர்; பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பாக நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து, பாரதியாரின் தேசப்பற்று மிக்க கவிதைகள் குறித்து பேசினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் சிக்கண்ணா அரசு கல்லுாரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் மணிகண்டன், 'சோதி மிக்க நவ கவிதை' என்ற தலைப்பில் மாணவர்களிடம் நவீன கவிதையின் கருத்துக்களை விளக்கிக் கூறினார்.
கருத்தரங்கில் நடைபெற்ற கவியரங்கத்தில் கவிஞர் விஜயராஜ் மற்றும் மாணவன் முத்துக்குமரன் கவிதை வாசித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சகாயராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவியர் சப்ரின் மற்றும் யோக வர்ஷினி தொகுத்து வழங்கினர்.