sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 100% குப்பை தரம் பிரிப்பு மாநகராட்சி முனைப்பு

/

 100% குப்பை தரம் பிரிப்பு மாநகராட்சி முனைப்பு

 100% குப்பை தரம் பிரிப்பு மாநகராட்சி முனைப்பு

 100% குப்பை தரம் பிரிப்பு மாநகராட்சி முனைப்பு


ADDED : டிச 25, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:

திருப்பூர் மாநகராட்சியின், 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திறம்பட மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 'நகரத் துாய்மைக்கான மக்கள் இயக்கம்' வாயிலாக, நுாறு சதவீதம் குப்பைகளை தரம் பிரிக்கப்பட்ட மாநகராட்சி என்ற இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு துாக்கி வீசி எறியப்படும் பாலிதீன் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க தென்னம்பாளையம் மார்கெட், உழவர் சந்தை, பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை வடக்கு ஆகிய பகுதிகளில், 155 கடைகளில் சோதனை நடத்தப்பட்டு பிளாஸ்டிக், 40 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 13,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மஞ்சப்பைகள் வினியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பபட்டது.

அறுபது வார்டுகளின் மேற்பார்வையாளர்களால், 46 பள்ளிகளில், 10,861 மாணவ, மாணவியர்களுக்கு குப்பை தரம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,756 மாணவர்களுக்கு திடக்ககழிவு மேலாண்மை குறித்த போட்டி நடத்தப்பட்டு, 397 மாணவர்களுக்கு குப்பை தொட்டிகள் பரிசாக வழங்கப்பட்டது. 39 பள்ளிகளில் மாநகராட்சி துாய்மை பணியாளர்களை கொண்டு கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

இறைச்சிக்கழிவுகள்

வீசுவது தவிர்ப்பு

மேலும், 193 கோழி இறைச்சி கடைகளிலிருந்து, 17 மெட்ரிக் டன் இறைச்சி கழிவுகள் பெறப்பட்டு ரோட்டோரம் கழிவுகள் வீசப்படுவது தவிர்க்கப்பட்டது. 1 முதல் 22ம் தேதி வரை மொத்தம், 128.640 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. மாநகராட்சி முழுதும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு வழித்தட வரைபடம் நிர்ணயிக்கப்பட்டு, மண்டல வாரியாக மக்காத குப்பைகள் தனியார் நிறுவனம் பெற்று கொள்ள உரிய ஏற்பாடு செய்யப்பட்டது.

திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்காதவர்கள் மற்றும் ரோட்டோரம் வீசுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களில் இருந்து கழிவுகளை வீசியபவர்களுக்கு, 38,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கடும் அபராதம் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்காதவர்கள் மற்றும் ரோட்டோரம் வீசுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. - அமித், மாநகராட்சி கமிஷனர்.







      Dinamalar
      Follow us