/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்பராயன் கோவில் பொங்கல் விழா
/
கருப்பராயன் கோவில் பொங்கல் விழா
ADDED : ஆக 11, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி ஒன்றியம், காசிக்கவுண்டன்புதுார் பகுதியில் எழுந்தருளியுள்ள புளியடி கருப்பராயன், கன்னிமார் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு நுாற்றுக்கும் மேற்பட்டோர், காந்திபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மா விளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
முன்னதாக திருவிளக்கு பூஜை மற்றும் அலங்கார பூஜை ஆகியவை நடந்தன. முனியப்பன் சுவாமி முன்பு கிடா வெட்டுதல், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.கோவில் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
---
சிறப்பு அலங்காரத்தில் புளியடி கருப்பராயன்.