/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் உற்பத்தியை மேம்படுத்தும் 'பயோசார்' பல்லடத்தில் உற்பத்தியை துவக்க திட்டம்
/
வேளாண் உற்பத்தியை மேம்படுத்தும் 'பயோசார்' பல்லடத்தில் உற்பத்தியை துவக்க திட்டம்
வேளாண் உற்பத்தியை மேம்படுத்தும் 'பயோசார்' பல்லடத்தில் உற்பத்தியை துவக்க திட்டம்
வேளாண் உற்பத்தியை மேம்படுத்தும் 'பயோசார்' பல்லடத்தில் உற்பத்தியை துவக்க திட்டம்
ADDED : ஜூலை 01, 2025 12:00 AM

பல்லடம், ; வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கில், 'பயோசார்' தயாரிக்கும் திட்டத்தை, பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதல்முறையாக துவங்கியுள்ளது.
பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் சுந்தரராஜ் கூறியதாவது:
மண்ணை மலடாக்காமல், குறைந்த தண்ணீர் பயன்பாட்டுடன், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து,விவசாயிகளுக்கு, உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்க 'பயோசார்' திட்டம் உதவு கிறது. மாட்டுச் சாணம், கோமியம், விவசாயக் கழிவுப்பொருட்களுடன் கரித்துண்டு சேர்த்து, வலுவூட்டி, குறிப்பிட்ட சதவீதத்தில் இவற்றைக் கலந்து, 'பயோசார்' தயாரிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில், கோடிக்கணக்கான கிலோ விறகு எரிக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் கரித்துண்டுகள் இயற்கையாகவே நமக்கு கிடைத்த வரப் பிரசாதம். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய வளர்ந்த நாடுகளில் 'பயோசார்' அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை.
ஏக்கருக்கு ஒரு டன் வீதம், மூன்று டன் 'பயோசார்' போட்டால், ஆயிரம் ஆண்டுக்கு இது பயனளிக்கும். இதனால், மூன்று மடங்கு தண்ணீர் தேவை குறைந்து, 50 சதவீதம் வரை விளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. முதல் கட்டமாக, ஒவ்வொரு மாதமும் ஆயிரம் டன் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, புனோவில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரமும் தருவிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.