/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓரணியில் தமிழகம் திட்டம் 85,000 குடும்பம் சேர்ப்பு
/
ஓரணியில் தமிழகம் திட்டம் 85,000 குடும்பம் சேர்ப்பு
ஓரணியில் தமிழகம் திட்டம் 85,000 குடும்பம் சேர்ப்பு
ஓரணியில் தமிழகம் திட்டம் 85,000 குடும்பம் சேர்ப்பு
ADDED : செப் 14, 2025 10:00 PM
திருத்தணி:ஓரணியில் தமிழகம் என்ற திட்டத்தின் கீழ், திருத்தணி சட்டசபை தொகுதியில், 85,000 குடும்பத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர் என, எம்.எல்.ஏ., சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'ஓரணியில் தமிழகம்' என்ற திட்டத்தின் இரண்டாவது கட்டம் இன்று துவங்குகிறது.
இதுகுறித்து, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் கூறியதாவது:
ஓரணியில் தமிழகம் திட்டத்தின் இரண்டாவது கட்டம் இன்று துவங்குகிறது. திருத்தணி சட்டசபை தொகுதியில், முதல் கட்டமாக, 85,000 குடும்பங்களை ஓரணியில் இணைத்துள்ளேன். தொகுதியில் உள்ள 330 ஓட்டுச்சாவடிகளில், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 933 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்த்துள்ளேன்.
இன்று அனைத்து ஓட்டுச்சாவடிகள் முன், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஐந்து உறுதிமொழிகளை எடுக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.