/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நான்காவது முறையாக சேதமடைந்த தரைப்பாலத்தில் ஆபத்தான பயணம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'

ADDED : பிப் 26, 2024 06:32 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, சத்தரை ஊராட்சி. இங்கிருந்து கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்று தரைப்பாலம்உள்ளது.
இந்த பாலத்தை பயன்படுத்தி, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர்.
மூன்று முறை சேதமடைந்த இந்த தரைப்பாலம், தற்போது 'மிக்ஜாம்' புயலால் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நான்காவது முறையாக சேதமடைந்தது.
நான்கு முறை சேதடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சேதமடைந்த தரைப்பாலம் பகுதியில் போக்குவரத்தை தடை செய்யாததால், இருசக்கர வாகனம், கார் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், ஆபத்தான நிலையில் சென்று வருகின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் சேதமடைந்த தரைப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்து, உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.