/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கங்கையம்மன் ஜாத்திரை திருத்தணியில் விமரிசை
/
கங்கையம்மன் ஜாத்திரை திருத்தணியில் விமரிசை
ADDED : செப் 09, 2025 10:37 PM
திருத்தணி:திருத்தணியில் நடந்த கங்கையம்மன் ஜாத்திரை விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
திருத்தணியில் அண்ணாநகர், குண்டலுார் மற்றும் முருகூர் ஆகிய பகுதிகளில், கங்கையம்மன் ஜாத்திரை விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான விழா நடந்தது. காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை பூகரகம் ஊர்வலம் மற்றும் வசந்த உத்சவமும் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இரவு 7:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன், சிறப்பு அலங்காரத்தில், பூகரகத்துடன் வீதியுலா வந்தார். இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது.
இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.