/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூர் தொழிற்பேட்டையில் ஏ.டி.எம்., அமைக்க கோரிக்கை
/
காக்களூர் தொழிற்பேட்டையில் ஏ.டி.எம்., அமைக்க கோரிக்கை
காக்களூர் தொழிற்பேட்டையில் ஏ.டி.எம்., அமைக்க கோரிக்கை
காக்களூர் தொழிற்பேட்டையில் ஏ.டி.எம்., அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 28, 2024 12:12 AM
காக்களூர், காக்களூர் தொழிற்பேட்டையில் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ஒன்றியம் காக்களூர் ஊராட்சியில், 283 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது. இங்கு, 365 தொழிற்சாலைகளில், 7 ஆயிரத்து 500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி நடைபெறும் தொழிற்பேட்டையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இரவு நேரத்தில், சமூக விரோதிகளால், தொழிலாளர்கள் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
மேலும், இங்கு தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கியின் எந்தவொரு கிளையும் இங்கு இல்லை. இதனால், வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள திருவள்ளூர் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், வங்கிகளின் ஏ.டி.எம்., மையமும் தொழிற்பேட்டையில் இல்லை. இதனால், சம்பளம் எடுக்கவும், அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்கவும் இங்கிருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள திருவள்ளூருக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே, காக்களூர் தொழிற்பேட்டையில் வங்கிகளின் ஏ.டி.எம்., அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

