/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வாலிபர் மீது காரை மோதி 200 மீட்டர் இழுத்துச்சென்ற எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

ADDED : செப் 19, 2025 03:05 AM

திருநெல்வேலி:வாலிபர் மீது காரை மோதி, பேனட்டில் விழுந்த அவரை 200 மீட்டர் துாரம் இழுத்துச்சென்ற போலீஸ் எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கயத்தாரை சேர்ந்த காந்திராஜன், 59; திருநெல்வேலி போக்குவரத்து போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,யாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, காந்திராஜன் காரில் சென்ற போது, டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் முன்னால் ஒரு பஸ் சென்றது.
பஸ்சுக்கும், எஸ்.ஐ., காருக்கும் நடுவில் டூ வீலரில் ஒருவர் சென்றார். அவர் மீது எஸ்.ஐ., ஓட்டிய கார் மோதியது. வாலிபர் டூ வீலரை ஓரமாக நிறுத்தி விட்டு காந்திராஜனிடம் தகராறு செய்தார். காந்திராஜனும் அப்போது போதையில் இருந்துள்ளார்.
அந்த நபர், திருநெல்வேலி டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த அசோக்குமார், 35, என, தெரியவந்தது.
அசோக்குமார் எஸ்.ஐ., காரின் பேனட்டில் படுத்தபடி தகராறு செய்தார். காந்திராஜன் அவரை பேனட் மீது படுத்தவாறே 200 மீட்டர் துாரத்திற்கு காரை ஓட்டிச் செல்ல, அந்த நபர் அலறி துடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, நேற்று எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்தார்.