ADDED : செப் 20, 2025 03:10 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே ஆலடிப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் 24. பெயின்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரித்திகா 20, என்பவரை காதலித்து 21 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.பிரித்திகா வீட்டில் காதல் திருமணத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது.
இதனிடையே அன்புராஜ் மனைவியுடன் திருநெல்வேலி ஜங்ஷன் மீனாட்சிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
பிரித்திகா, தனது தாய் மற்றும் குடும்பத்தினரிடம் அலைபேசியில் அடிக்கடி பேசுவதை அன்புராஜ் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவிலும் பிரித்திகா தனது தாயாருடன் பேசி உள்ளார். இதனால் கோபமுற்ற அன்புராஜ் மனைவியின் கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கி காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.