/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நீதிமன்ற ஊழியர் வீட்டில் நகை திருடிய உறவினர் கைது
/
நீதிமன்ற ஊழியர் வீட்டில் நகை திருடிய உறவினர் கைது
ADDED : செப் 14, 2025 03:42 AM
திருநெல்வேலி:தென்காசி அருகே நீதிமன்ற ஊழியர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் உறவினர் ஒருவர் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்ற ஊழியராக உள்ளார். கடந்த 10-ந்தேதி காலை அவர் பணிக்கு சென்றார். அவரது மனைவி தாயாரை பார்க்க சென்றார்.
கல்யாணசுந்தரம் மாலை வீடு திரும்பியபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல் உள்ளிட்ட 20 பவுன் நகைகள் காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த அவர், சேர்ந்தமரம் போலீசில் புகார் அளித்தார்.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கல்யாணசுந்தரத்தின் உறவினரான சேர்ந்தமரம் சங்கர் 48, சம்பவத்தன்று வீட்டிற்கு வந்துச் சென்றது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரிக்கையில், வழக்கமாக வைக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். சங்கரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகைகளை சங்கரன்கோவில் அருகே பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து மீட்டனர்.