/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவனை தாக்கிய ஆசிரியை மீது பெற்றோர் போலீசில் புகார்
/
மாணவனை தாக்கிய ஆசிரியை மீது பெற்றோர் போலீசில் புகார்
மாணவனை தாக்கிய ஆசிரியை மீது பெற்றோர் போலீசில் புகார்
மாணவனை தாக்கிய ஆசிரியை மீது பெற்றோர் போலீசில் புகார்
ADDED : செப் 14, 2025 03:42 AM

திருநெல்வேலி:வகுப்பறையில் மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை மீது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த முகமது ஹாரிப் மகன் முகமது ஹாரிஸ் 16. வள்ளியூரில் உள்ள கெயின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.
சில நாள்களுக்கு முன், வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சுபாஷினி, முகமது ஹாரிசை பிரம்பால் தாக்கியுள்ளார். இதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததோடு, போலீசிலும் புகார் செய்தனர். மாணவனின் தாய் ஹலிம்ஷா கூறுகையில்எனது மகன் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறி, ஆசிரியை சுபாஷினி அவரை மட்டும் அழைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்ததாவது:
இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.