/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பொய் வழக்கு போட்டதாக புகார் போலீசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
/
பொய் வழக்கு போட்டதாக புகார் போலீசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பொய் வழக்கு போட்டதாக புகார் போலீசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பொய் வழக்கு போட்டதாக புகார் போலீசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : செப் 12, 2025 01:14 AM
திருநெல்வேலி:இளைஞரை தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், டோனாவூரை சேர்ந்தவர் ஜோசப் செல்வகுமார். சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்தார். 2018 ஜூலை, 14ல் சொந்த ஊர் வந்த அவருக்கு, அந்த ஆண்டு ஆக., 20ல் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக வீட்டில் பெயின்ட் அடித்தனர்.
இது சம்பந்தமாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெபத்தாய் தகராறு செய்ததில், பெயின்டர் நெல்சன், ஜெபத்தாய் மீது பெயின்டை ஊற்றினார். ஜெபத்தாய் புகாரில், ஏர்வாடி போலீசார் நெல்சன், ஜோசப் செல்வகுமார் மீது வழக்கு பதிந்தனர்.
பின், 2018 ஆக., 20ல் திருமணம் நடந்தது. இதையொட்டி, ஜோசப் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். திருமணத்திற்கு பின் நிபந்தனை ஜாமினுக்காக ஏர்வாடி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக சென்றார்.
அங்கு எஸ்.ஐ., இம்மானுவேல், போலீஸ்காரர் முத்துக்குமார், 'எப்படி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் வாங்கினாய்?' என கேட்டு அவரை தாக்கினர்.
பொய் புகாரில் வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.
ஜோசப் செல்வகுமார், தமிழக மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் மனித உரிமையை மீறியது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, 1 லட்சம் ரூபாய் இழப்பீடை, ஜோசப் செல்வகுமாருக்கு, நான்கு வாரங்களுக்குள் அரசு வழங்க மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டார்.
அதில், எஸ்.ஐ., இம்மானுவேல், போலீஸ்காரர் முத்துக்குமார் ஆகியோரிடமிருந்து தலா, 50,000 ரூபாய் வசூலிக்கவும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.