/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
எரிவாயு பங்க்கில் வேன் தீக்கிரை
/
எரிவாயு பங்க்கில் வேன் தீக்கிரை
ADDED : டிச 30, 2025 06:33 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் எரிவாயு நிரப்ப வந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த ஷேக் அலி எரிவாயு மூலம் இயங்கும் ஆம்னி வேனை வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று மதியம் உடையார்பட்டி அருகே உள்ள எரிவாயு நிலையத்தில் வேனில் காஸ் நிரப்பினார்.
அப்போது திடீரென வேன் தீப்பற்றியது. ஷேக் அலி உடனடியாக வேனை சாலைக்கு நகர்த்தினார். எரிவாயு நிலையத்தில் தீப்பற்றியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அவரது சாமர்த்தியத்தால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
வேனை சாலையில் நிறுத்தியவுடன் அவர் கீழே குதித்து தப்பினார். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்து ேசதமானது. இதனால் திருநெல்வேலி - மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். தச்சநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

