/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
உரிமையாளர் சிறைக்குச் சென்றதால் பட்டினியால் நாய்கள் பரிதாப பலி
/
உரிமையாளர் சிறைக்குச் சென்றதால் பட்டினியால் நாய்கள் பரிதாப பலி
உரிமையாளர் சிறைக்குச் சென்றதால் பட்டினியால் நாய்கள் பரிதாப பலி
உரிமையாளர் சிறைக்குச் சென்றதால் பட்டினியால் நாய்கள் பரிதாப பலி
ADDED : டிச 31, 2025 05:12 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் அழகேசன். ராமையன்பட்டி அருகே கம்மாளங்குளத்தில் விலை உயர்ந்த நாய்களை வளர்த்து வந்தார்.
இவர் பழைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட நாய்களுக்கு 15 நாட்களாக உணவு வழங்கப்படவில்லை. இதில் சில நாய்கள் பரிதாபமாக இறந்தன. வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தகவலறிந்த விலங்கு நல ஆர்வலர்கள், போலீசாருடன் வீட்டிற்கு சென்று உயிருடன் இருந்த நாய்களை மீட்டனர். அங்கு ராட்வீலர், பெல்ஜியம், ஹஸ்கி, லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர் உள்ளிட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டது தெரிய வந்தது.
இதில் ஒரு பெல்ஜியம் நாயின் மதிப்பு மட்டும் ரூ.1.25 லட்சம்.
நாய்களை பராமரிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.