/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் மீது பஸ் மோதி இருவர் காயம்
/
டூவீலர் மீது பஸ் மோதி இருவர் காயம்
ADDED : டிச 24, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர் செல்லம் 34. இவரது நண்பர் சுப்பிரமணி 24.
இருவரும் டூவீலரில் எ.புதுப்பட்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
எதிரே வந்த தனியார் பஸ், டூவீலர் மீது மோதியதில் டூவீலரை ஓட்டிச் சென்ற செல்லம், பின்னால் உட்கார்ந்து சென்ற சுப்பிரமணி காயமடைந்தனர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடகரை போலீசார் விபத்து ஏற்படுத்திய பள்ளபட்டியைச் சேர்ந்த பஸ் டிரைவர் தினேஷ்குமாரிடம் விசாரணை செய்கின்றனர்.

