ADDED : செப் 09, 2025 04:49 AM
மூணாறு: மூணாறு அருகே செக்யூரிட்டி கொலை செய்யப்பட்டு 18 நாட்கள் ஆகியும் துப்பு எதுவும் கிடைக்காததால், இடுக்கி எஸ்.பி.சாபுமாத்யூ தனிப்படை போலீசாருடன் விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினார்.
கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷனைச் சேர்ந்த ராஜபாண்டி 68, தனியார் ஏஜென்சி மூலம் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். அவர் சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் ஆக.23ல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.
மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தலைமையில் 18 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
அவர்கள் 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் அலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர். எனினும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. கொலை தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும், அவர்களது பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.
கொலையாளி குறித்து எவ்வித துப்பும் கிடைக்காததால், இடுக்கி எஸ்.பி. சாபுமாத்யூ தனிப்படை போலீசாருடன் விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினார்.