/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உடற் கூராய்வு கட்டட பராமரிப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
/
உடற் கூராய்வு கட்டட பராமரிப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
உடற் கூராய்வு கட்டட பராமரிப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
உடற் கூராய்வு கட்டட பராமரிப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : டிச 28, 2025 05:34 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பணி நடைபெற்று வரும் உடற்கூராய்வு கட்டட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், கட்டட பராமரிப்பு பணிகளை மருத்துவமனை நிர்வாகம் 2 வாரங்களுக்கு முன் துவக்கியது. இதனால் இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை, தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை அல்லது உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
கம்பம் அரசு மருத்துவமனையின் எல்லையாக காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, நாரயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கூடலூர், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப் போன்ற பகுதிகள் உள்ளன. இப் பகுதியில் தினமும் ஏதாவது ஒரு உடற்கூராய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அந்த நேரங்களில் இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் பிரச்னை செய்கின்றனர். காரணம் இறந்தவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் தேனி அல்லது உத்தமபாளையத்திற்கு செல்ல வேண்டும். இப் பிரச்னை தினமும் போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் இதை கண்டு கொள்வதில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இந்த விசயத்தில் அலட்சியம் காட்டாமல் - உடற்கூராய்வு கட்டட பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

