/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாய மின் இணைப்பு வழங்குவதில் அரசியல் கட்சியினர் குறுக்கீடு ! முன்னுரிமைப்படி பரிசீலிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : டிச 25, 2025 05:52 AM

மாவட்டத்தில் தட்கல் சிறப்புத் திட்டத்தில் விவசாய மின் இணைப்புப் பெற விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இதில் 5 எச்.பி., குதிரைத் திறன் மின் மோட்டாருக்கு ரூ.2.5 லட்சமும், 7.5 எச்.பி.,க்கு ரூ.2.75 லட்சமும், 10 எச்.பி.,க்கு ரூ.3 லட்சமும், 12.30 முதல் 15 எச்.பி.,க்கு ரூ.4 லட்சமும் டிபாசிட் தொகை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாயிகள் பலரும் தட்கல் முறையில் விண்ணப்பித்து வருகின்றனர். செயற்பொறியாளர்களுக்கு எவ்வளவு விண்ணப்பங்கள் பெற வேண்டும் என இல்லாமல் அனைத்து விண்ணப்பங்களையும் அதிகாரிகள் பெற்று வந்தனர். தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 914 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு இணைப்பு வழங்க முடியாத சூழ்நிலை உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் தங்களின் ஆதரவாளர்கள் என கூறி மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்களுக்கு சிபாரிசு செய்து, பரிசீலிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் தருகின்றனர். மாநிலத்தில் 38 மாவட்டங்களுக்கும் 10 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்க வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இச் சூழலில் எந்த அடிப்படையில் இணைப்பு வழங்குவது என தெரியாமல் அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். விவசாயிகள் சங்க நிர்வாகிகள், 'விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்தி அதன் படி இணைப்பு வழங்க வேண்டும்,'என வலியுறுத்திஉள்ளனர்.
முன்னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் கூறுகையில், 'விவசாயிகள் நலன் கருதி மின் இணைப்பு வழங்கும் இத்திட்டம் விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
அதே நேரம் ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு இன்னும் இணைப்பு கிடைக்காத நிலை உள்ளது. இந் நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமைப்படி பரிசீலனை செய்து இணைப்பு வழங்க வேண்டும். அரசியல் கட்சியினர் குறுக்கீடு செய்வதை தடுக்க, மேற்பார்வை பொறியாளர், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.