ADDED : டிச 25, 2025 05:51 AM
நடந்து சென்றவர் வாகனம் மோதி பலி
தேனி: பொம்மையக்கவுண்டன்பட்டி கட்டளை கிரி தெரு கோவிந்தராஜ் 45. இவரின் தந்தை அழகர்சாமி 60. இவர் சாலை பிள்ளையார் கோயில் அருகே ரோட்டில் குறுக்கே நடந்து சென்றார். இவர் மீது தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெரு சரவணக்குமார் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனம் மோதி விபத்து நடந்தது. இதில் காயம் அடைந்தஅழகர்சாமியை, ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி அனுமதித்தனர். சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை
தேனி: அல்லிநகரம் வரதம்மாள் கோயில் தெரு வரதம்மாள் 40. கண் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2 மாதங்களாக பார்வைத் திறன் குறைந்து வந்தது.மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீடு திரும்பிய நிலையில் தனது மகள் வனிதா 35, வீட்டில் தங்கியிருந்த வரதம்மாள், டிச.22 இரவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

