/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மருத்துவக் கல்லுாரியில் செவிலியர்கள் போராட்டம்
/
தேனி மருத்துவக் கல்லுாரியில் செவிலியர்கள் போராட்டம்
தேனி மருத்துவக் கல்லுாரியில் செவிலியர்கள் போராட்டம்
தேனி மருத்துவக் கல்லுாரியில் செவிலியர்கள் போராட்டம்
ADDED : டிச 21, 2025 06:20 AM

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 12 ஆயிரம் செவிலியர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் குறைவான சம்பளத்தில் பணியாற்றுகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனைத் தொடர்ந்து தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செவிலியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துமாரியம்மன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

