/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வயலில் பாய்ந்த ஆம்னி பஸ் 47 பயணிகள் உயிர் தப்பினர்
/
வயலில் பாய்ந்த ஆம்னி பஸ் 47 பயணிகள் உயிர் தப்பினர்
வயலில் பாய்ந்த ஆம்னி பஸ் 47 பயணிகள் உயிர் தப்பினர்
வயலில் பாய்ந்த ஆம்னி பஸ் 47 பயணிகள் உயிர் தப்பினர்
ADDED : டிச 21, 2025 06:19 AM

உத்தமபாளையம்: கேரளாவிற்கு தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆம்னி பஸ் எதிரே வந்த லாரி மீது மோதுவதை தவிர்க்க பஸ் டிரைவர் சாமர்த்தியமாக வயலுக்குள் இறக்கியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். குறைந்த கூலி, அதிக நேரம் வேலை போன்ற அம்சங்களால் ஏல விவசாயிகள் வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.
ஏலத்தோட்டங்கள் மற்றும் கேரளாவில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், லாட்ஜ்களிலும் வட மாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்படுகின்றனர். தொழிலாளர்களை அழைத்து வர ஏஜென்சிகளும் உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 47 தொழிலாளர்களை சென்னையில் இருந்து ஆம்னி பஸ் ஒன்றில் டிரைவர் ஆலன்சார்ஜ் 35, ஏற்றிக் கொண்டு, கட்டப்பனை நோக்கி சென்றது. அதிகாலை 3:00 மணியளவில் சின்னமனூரில் இருந்து உத்தம பாளையம் ரோட்டில் சென்றபோது பைபாசில் எதிரில் வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதுவது போல் வந்துள்ளது.
சுதாரித்த பஸ் டிரைவர், வலதுபுறம் தடுப்பு கம்பிகளை உடைத்து பஸ்சை நெல் வயலுக்குள் இறக்கினார்.
இதனால் டிரைவர் ஆலன்சார்ஜ் 35மற்றும் 47 பயணிகளுக்கும் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் உயிர் தப்பினார்கள். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

