/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திராட்சை விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்
/
திராட்சை விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்
திராட்சை விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்
திராட்சை விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2024 04:52 AM
கம்பம்: உத்தமபாளையம் அருகில் உள்ள தனியார் ஒயின் தொழிற்சாலை நிர்வாகம் திராட்சை விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆனைமலையன்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஒயின் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. திராட்சை விவசாயிகளிடமிருந்து தொழிற்சாலைக்கு தேவையான பழங்களை கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இங்கு விளையும் திராட்சையில் ஒயின் தயாரிக்க தேவையான இனிப்பு தன்மை இல்லையென்று தொழிற்சாலை வாங்க மறுத்தது. பின்னர் சமீப காலமாக விலை குறைவாக இருக்கும் காலங்களில் கணிசமாக கொள்முதல் செய்கின்றனர். அதுவும் விலை குறைவாக கிடைத்தால் மட்டுமே வாங்குகின்றனர், அத்தோடு வாங்கிய பழங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் இழுபறி நிலை உள்ளதென்று விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒயின் தொழிற்சாலை நிர்வாகம் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. திராட்சை விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இனி இடைத்தரகர்களின்றி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யவும், உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படும் என தொழிற்சாலை சார்பில் தெரிவிக்கப்பட்டது. விலை கிலோ ரூ.25 நிர்ணயிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பாக சுருளிபட்டி திராட்சை விவசாயிகள் சங்க தலைவர் முகுந்தன் கூறுகையில், தொழிற்சாலை இதுவரை இது போன்ற கூட்டங்களை நடத்தவில்லை. இப்போது நடத்தியிருப்பது பரவாயில்லை.- விலை குறைவாக இருக்கும் போது தான் கொள்முதல் செய்வோம் என்கின்றனர். அதை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் கட்டுபடியான விலை வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் பட்டுவாடா செய்யவும், இடைத்தரகர்களை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினோம் என்றார்.

