/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கரும்பு லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்
/
கரும்பு லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்
ADDED : ஆக 12, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு நேருஜி நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் டிரைவர் காயம் அடைந்தார்.
முத்தாலம்பாறையில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு மயிலாடும்பாறை நோக்கி சென்ற லாரியை தேனி மணியக்காரன்பட்டியை சேர்ந்த அழகுராஜா 44, ஓட்டிச் சென்றார். நேருஜி நகர் அருகே சென்ற போது கட்டுப்பாடு இழந்த லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது.
லாரி கவிழ்ந்ததில் அப்பகுதியில் இருந்த சுடுகாடு சுற்றுச்சுவர் சேதமடைந்தது.
விபத்தில் காயமடைந்த டிரைவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

