/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மனைவியை கொன்ற கணவன் 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்
/
மனைவியை கொன்ற கணவன் 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்
மனைவியை கொன்ற கணவன் 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்
மனைவியை கொன்ற கணவன் 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்
ADDED : ஆக 20, 2025 03:04 AM

தஞ்சாவூர்:மனைவியை கொலை செய்த வழக்கில் தலைமறைவானவரை, ஆறு ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பவுண்டரீகபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 45. இவரது மனைவி ஜெயசித்ரா; நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் வேலை பார்த்தார். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த 2016 ஏப்., 27 அதிகாலை, குடிபோதையில் இருந்த மோகன்ராஜ், இரும்பு கம்பியால் தாக்கியதில், காயமடைந்த ஜெயசித்ரா ஏப்., 30ல் இறந்தார். திருநீலக்குடி போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 2019 வரை ஆஜராகி வந்த மோகன்ராஜ், பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததால், போலீசார் மோகன்ராஜை தேடினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், குழந்தைகளை பார்க்க வந்த மோகன்ராஜை, ஆறு ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.