/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய மாடுகள் உயிருடன் மீட்பு
/
கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய மாடுகள் உயிருடன் மீட்பு
ADDED : ஆக 20, 2025 11:31 PM
தஞ்சாவூர்:தி ருவையாறு அருகே, கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் சிக்கிய ஐந்து மாடுகளை, தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, வைத்தியநாதன்பேட்டை கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில், வைத்தியநாதன் பேட்டையை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் வளர்க்கும் இரண்டு பசு மாடுகள், இரண்டு கன்று குட்டிகள், கீழத்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரின் பசு மாடு ஆகியன சிக்கிக் கொண்டன.
இது குறித்து, மாடுகளின் உரிமையாளர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஐந்து மாடுகளையும் உயிருடன் மீட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.