ADDED : ஜன 30, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனித நேய வார நிறைவு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா வரவேற்றார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுபைதாள் பேகம், சிவகங்கை டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், உதவி கமிஷனர் ( ஆயத்தீர்வை) ரங்கராஜன், உதவி இயக்குனர் (கனிமம்) சரவண பெருமாள், அரசு வழக்கறிஞர் துஷாந்த் பிரதீப்குமார், நலக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், சேது, சேவுகன், பரமசிவம், ஆறுமுகம், அலுவலக கண்காணிப்பாளர் ஹாஜிரா பாத்திமா பங்கேற்றனர். ஆதிதிராவிடர் நல மாவட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.