/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் கேட்டு சாலை மறியல் ஊராட்சி செயலரும் சிறைபிடிப்பு
/
குடிநீர் கேட்டு சாலை மறியல் ஊராட்சி செயலரும் சிறைபிடிப்பு
குடிநீர் கேட்டு சாலை மறியல் ஊராட்சி செயலரும் சிறைபிடிப்பு
குடிநீர் கேட்டு சாலை மறியல் ஊராட்சி செயலரும் சிறைபிடிப்பு
ADDED : டிச 18, 2025 04:52 AM
இடைப்பாடி: இடைப்பாடி, இருப்பாளி அருகே மேலக்கரைப்பட்டி, மேல் காட்டுப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள், அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் அத்தொட்டி நிரப்பப்படாததால், 15 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊராட்சி செயலர் கோவிந்தராஜிடம் முறையிட்டும் பலனில்லை. ஆத்திரமடைந்த பெண்கள், நேற்று மதியம், 2:00 மணிக்கு காலி குடங்களுடன் பக்கநாடு -இருப்பாளி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த கோவிந்தராஜை சிறைபிடித்து, 'எங்களுக்கு ஏன் தண்ணீர் வினியோகிக்கவில்லை' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்கு வந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், பேச்சு நடத்தினார். தொடர்ந்து உடனே தொட்டிக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால்
கோவிந்தராஜை மக்கள் விடுவித்து கலைந்து சென்றனர்.

