/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு கலை கல்லுாரி வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை
/
அரசு கலை கல்லுாரி வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை
அரசு கலை கல்லுாரி வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை
அரசு கலை கல்லுாரி வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை
ADDED : டிச 17, 2025 07:39 AM
மேட்டூர்: மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று, அரக்கோணம் உதவி கமாண்டர் வைத்தியலிங்கம், ஆய்வு கமாண்டர் அர்ஜூன் பால்ராஜ் உள்பட, 16 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாணவ, மாணவியர் முன், பேரிடர் காலத்தில் மீட்பு பணி குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கல்லுாரி உட்பகுதியில் சிக்கியவர்களை மீட்பது, அவர்களுக்கு முதலுதவி, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்-வது ஆகியவற்றை செய்து காட்டினர். சிலரை மீட்க கதவை துளையிட்டும், மேற்பகுதியில் சிக்கியவர்களை தற்காலிக, 'விஞ்ச்' மூலமும் மீட்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். ரூபி, பிரின்சி என இரு மோப்ப நாய்களை பயன்படுத்தியும் ஒத்-திகையில் ஈடுபட்டனர்.
சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார், மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், கல்-லுாரி முதல்வர் திருப்பதி மேற்பார்வையில் ஒத்திகை நடந்தது.