ADDED : டிச 26, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, பட்டிப்பாடி வழியே வேலுார் மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் நேற்று புறப்பட்டது. பின் அங்கி-ருந்து மீண்டும், ஏற்காடு நோக்கி புறப்பட்டது.
டிரைவர் சரவண-குமார் ஓட்டினார். மதியம், 1:15 மணிக்கு, கடுக்காமரம் அருகே வந்தபோது பஸ்சின், 'பானட்' பகுதியில் புகை வந்தது. சரவண-குமார் பஸ்சை நிறுத்தி பயணியரை இறக்கி விட்டு பானட்டை திறந்து பார்த்தார். அப்போது ஒயர் தீப்பிடித்து எரிந்தது. உடனே சரவணகுமார், கண்டக்டர் சண்முகநாதன் ஆகியோர், பேட்டரி இணைப்பை துண்டித்துவிட்டு, நெருப்பை அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

